

ஊழல் வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் ஆனந்த் ஜோஷிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
மத்திய உள்துறை அமைச்சகத் தில், ‘வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டம் (எப்.சி.ஆர்.ஏ)’ தொடர்பாக கோப்பு களை ஆனந்த் ஜோஷி கையாண்டு வந்தார். இவரை கடந்த மே 15-ம் தேதி சிபிஐ கைது செய்தது.
எப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி ஆதாயம் பெறுவதற்காக அவற்றுக்கு தன்னிச்சையாக நோட்டீஸ் அனுப்பியதாக ஜோஷி மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கேர் இண்டியா, ஸ்னேகாலயா அறக்கட்டளை, இண்டியன் எச்ஐவி/எய்டஸ் அலையன்ஸ் உள் ளிட்ட தொண்டு நிறுவனங்களிடம் ஜோஷி லஞ்சம் கேட்டதாகவும் சிலரிடம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. “உள்துறை அமைச்சகத்தில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களின் கோப்புகள் காணாமல் போயுள்ளன. இவை ஆனந்த் ஜோஷியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. கோப்புக்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பார்க்கும் அதிகாரம் ஜோஷிக்கு இல்லை” என்றும் சிபிஐ குற்றம் சாட்டியது.
நீதிமன்ற காவலில் இருந்து வரும் ஜோஷியின் ஜாமீன் மனு, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வினோத் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜோஷிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. சாட்சிகளை அச்சுறுத்தவும், தலைமறைவாகவும் வாய்ப்புள்ள தால் ஜோஷிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ கூறியது.
இதற்கு நீதிபதி, “ஜோஷி மீது கடுமையாள குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரை கால வரம் பின்றி சிறையில் வைத்திருக்க முடியாது” என்றார். பிறகு பல்வேறு நிபந்தனைகளின் கீழ் ஜோஷிக்கு ஜாமீன் வழங்கினார்.
“டெல்லி மற்றும் காசியாத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. விசாரணை அதிகாரியிடம் பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். விசாரணையில் உள்ள தொண்டு நிறுவனங்களிடமோ, சாட்சிகளிடமோ தொடர்புகொள்ள கூடாது” என்பது உள்ளிட்ட பல் வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.