

திருப்பதி விமான நிலையத்தில் திரவ வெடிமருந்து பொருட்களுடன் விமானம் ஏற வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து வெடி பொருட் களும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதி அருகே ரேணிகுண்டா வில் உள்ள சர்வதேச கருடா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் 2.20 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட விமானம் ஒன்று தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் ஏற காத் திருந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினர். அப்போது 4 பயணிகள் தங்களது உடைமை களில் திரவ வெடி பொருட்கள் வைத் திருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக 4 பேரையும் கைது செய்து, அவர் களிடம் இருந்த வெடி பொருட் களையும் பறிமுதல் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திருப்பதி எஸ்பி ஜெயலட்சுமி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்தத் தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை.