

மத்திய அரசு தாக்கல் செய்த நடப்பாண்டுக்கான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எவ்வளவு கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது என்ற தகவலை அரசு இந்த பட்ஜெட்டில் ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இந்த பட்ஜெட் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர், ‘‘அரசியலை தூய்மைப்படுத்து வதற்காக அரசியல் கட்சிகளின் நன்கொடை முறைகள் வெளிப் படைத் தன்மை ஆக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை அரசு எவ்வாறு அமல்படுத்தப் போகிறது என்ற தெளிவான திட்ட வரையறைகள் குறிப்பிடவில்லை.
சுருக்கமாக சொல்வதென் றால் இந்த பட்ஜெட் 5 மாநில தேர்தலை மனதில் வைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் நலனுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி சரிந்து விட்டது என்பதை மட்டும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது’’ என்றார்.