துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி: காஷ்மீரில் பலியானோர் 45 ஆக உயர்வு

துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி: காஷ்மீரில் பலியானோர் 45 ஆக உயர்வு
Updated on
1 min read

காஷ்மீரில் வன்முறையை கட்டுப் படுத்த பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயரிழந்தார். இதன் மூலம் அங்கு வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை. எனினும் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் வன்முறை வெடிக்கலாம் என கருதி பள்ளத்தாக்கின் 10 மாவட் டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத் தாக்கில் பல்வேறு இடங்களில், பெரும்பாலும் பாரமுல்லா, குப்வாரா, புல்வாமா ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

இதில் புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியின் சுர்சூ என்ற இடத்தில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் முஷ்தாக் அகமது பட் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். பின்னர் இவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முன்னதாக, அனந்தநாக் மாவட்டம், கொகர்நாக் பகுதியில் சில நாட்களுக்கு முன் வன்முறை யில் காயமடைந்த இஷ்தியாக் அகமது என்ற இளைஞர் நகர் மருத்துவமனையில் நேற்று உயி ரிழந்தார். இதன் மூலம் காஷ்மீரில் வன்முறைக்கு பலியானோர் எண் ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீரில் மொபைல் போன், மொபைல் இன்டெர்நெட் சேவை 14-வது நாளாக நேற்றும் முடக்கி வைக்கப்பட்டது. பிரிவினைவாதி கள் நடத்தும் போராட்டம் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் கடந்த 2 வாரங்களாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தி, அனந்தநாக் மாவட்டத்தில் வன்முறையில் இறந்தவர்களின் குடும்பத்திரை நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார். காய மடைந்தவர்களின் குடும்பத்தின ரையும் அவர் சந்தித்தார்.

இதனிடையே காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in