

கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளதால் கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி தமிழ் அமைப்பினர் கர்நாடக அரசிடம் மனு அளித்துள்ளனர்.
நேற்று பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தாமோதரன் தலைமையில் தமிழ் அமைப்பினர் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், “காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசின் முடிவுக்கு கர்நாடக தமிழர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு தெரி வித்துள்ளோம். இருப்பினும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது வேதனை யளிக்கிறது.
எனவே பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங் களில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு உரிய பாது காப்பு அளிக்க வேண்டும். தமிழர்களின் அமைப்பு களுக்கும், பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், கட் டிடங்களுக்கும், நிறுவனங் களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு போட வேண்டும்'' என குறிப்பிடப் பட்டு இருந்தது.
இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, கர்நாடக தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.