Last Updated : 06 Jun, 2016 10:39 AM

 

Published : 06 Jun 2016 10:39 AM
Last Updated : 06 Jun 2016 10:39 AM

பிஹார் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் தகுதியில்லாதவர் முதலிடம் பிடிக்க யார் காரணம்?- கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க நிதிஷ் உறுதி

‘பிஹார் பிளஸ் 2 தேர்வில் தகுதி யில்லாத மாணவர்கள் முதலிடம் பிடித்ததற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரும் தப்ப முடியாது’ என, மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

‘கடந்தாண்டு மெட்ரிக் தேர்வில் முறைகேடு தொடர்பாக புகைப்படங்கள் வெளியானதும், நாங்கள் கடும் நடவடிக்கை எடுத் தோம். அதன் விளைவாக இந் தாண்டு மெட்ரிக் தேர்வில் முறை கேடுகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டன.

அதேபோல் பிளஸ் 2 முதலிட மாணவர் விவகாரத்திலும் விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் கல்வித் துறை நட வடிக்கைகளை மேற்கொள்ளும். நானும் இதில் தனி கவனம் செலுத்துவேன்’ என்றும் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

இதற்கிடையே, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 13 பேருக்கு, கடந்த 3-ம் தேதி பாட்னா வில் நடைபெற்ற மறுதேர்வில், தோல்வியடைந்த சவுரப் மற்றும் ராகுல் ஆகிய 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப் பட்டன. எனினும், மறுதேர்வில் பங் கேற்ற மற்ற 11 மாணவர்கள் அதிக மதிப்பெண்களுக்கு தகுதியான வர்கள் என்பது உறுதி செய்யப் பட்டதால், அவர்களின் தேர்வு முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என, பிஹார் பள்ளித் தேர்வுகள் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் தெரிவித்தார்.

அரசியல் அறிவியல் பாடம், சமையல் கலை சம்பந்தப்பட்டது எனக் கூறிய கலைப் பிரிவு மாணவி ரூபியையும் சேர்த்து, முதலிட மாணவர்கள் 14 பேரை மறுதேர்வு எழுத வாரியம் அழைத்திருந்தது. ஆனால், மறுதேர்வில் ரூபி பங் கேற்கவில்லை. மனம் மற்றும் உடல் நிலை சரியில்லை என, அவரின் தந்தை கடிதம் அனுப்பியதாக, லால்கேஷ்கர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x