

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட் பூரில் வேன் விபத்துக்குள்ளாகி, 5 பெண்கள் பலியாகினர்.
இதுகுறித்து ஜம்ஷெட்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் முகமது அர்ஷி கூறியதாவது:
சுமார் 20 பேர், ஜம்ஷெட்பூரில் இருந்து அருகில் உள்ள சொந்த கிராமத்துக்கு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். சாம்தா என்ற இடத்தில், திடீரென வேன் நிலை தடுமாறி, சாலையோர மரத்தில் மோதி, பின்னர் அங்கிருந்த மின் கம்பத்திலும் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 5 பெண்கள் பலியாகினர். 12 பேர் படுகாயங் களுடன், ஜம்ஷெட்பூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்துக்கு உள்ளான வேனில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். வேன் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அர்ஷி கூறினார்.