மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துங்கள்: பாஜக முதல்வர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துங்கள்: பாஜக முதல்வர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
Updated on
1 min read

மத்திய அரசின், ஏழைகளுக்கான நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டுமென, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து, கட்சித் தலைவர் அமித்ஷா பேசும்போது,

‘நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 51 சதவீதத்தையும், மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதத்தையும் பாஜக ஆட்சி செய்கிறது. அதேபோல், ஏழைகளின் நலன் மற்றும் சிறந்த நிர்வாகம் தொடர்பான மத்திய அரசின் 80 திட்டங்களில், 65 திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளின் வசம் உள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் வெற்றிக்கு மாநில அரசுகளே மிக முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, ஏழைகள் நலனுக்காகவும், நல்ல நிர்வாகத்தை உறுதி செய்வது தொடர்பாகவும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை மாநில அரசுகள் திறம்பட செயல்படுத்த வேண்டும்’ என்றார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸிடம் கேட்டபோது, ‘இக்கூட்டத்துக்கான நோக்கம், நல்ல நிர்வாகம் என்பது மட்டும்தான். அரசியல் அல்ல’ என்றார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தவிர, பாஜக ஆளும் மற்ற அனைத்து மாநில முதல்வர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in