

குஜராத் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் மற்றும் அவரது படகுகளை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று கைது செய்தனர்.
குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்ட கடற்பகுதிக்குள் சுமார் 34 நாட்டிகல் மைல் தூரம் அத்துமீறி பாகிஸ்தான் மீனவர்கள் நுழைந்தனர்.
அவர்களை எச்சரிப்பதற்காக காவல்ப்படையினர் வானை நோக்கி சுட்டு, மீனவர்களை திரும்பி போகும்படி எச்சரித்தனர்.
அதனை மீறியும் பாகிஸ்தான் மீனவர்கள் அத்துமீறியபோது, அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மித்தா துறைமுகத்தின் மேற்கு பகுதியில் கைது செயதனர். மேலும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
14 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக இந்திய கடலோர காவல் படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.