

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி களின் செயல்திறன் மதிப்பீடு அறிக்கைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி களின் செயல்திறன் மதிப்பீடு அறிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், அதனை ஆன்லை னில் பதிவிடுவதற்கான நடவடிக் கைகளை எடுக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இதில் புதிய விதிகளை வரையறுத்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என அனைத்து சேவைப் பணி அதிகாரிகளுக்கும் இந்த விதி பொருந்தும். இதற்கு அனுமதி கிடைத்ததும் உடனடியாக செயல் பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய விதியின்படி ஆன்லைனில் அதிகாரிகளின் செயல்திறன் மதிப்பீடு தொடர்பான அறிக்கைகளை ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதிக்குள் பதிவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்து வரும் 15-ம் தேதிக்குள் கருத்துகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை மாநில அரசுகளிடம் இருந்து பதில் வரவில்லை என்றால், புதிய விதிக்கு ஆட்சேபம் எழவில்லை என எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.