உ.பி., பஞ்சாப் மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மம்தா பிரச்சாரம்

உ.பி., பஞ்சாப் மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மம்தா பிரச்சாரம்
Updated on
1 min read

உ.பி., பஞ்சாப் ஆகிய மாநிலங் களில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக் கிறார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி செய் யும் மம்தா, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வருகிறார். குறிப்பாக பண மதிப்பு நீக்க எதிர்ப்பில் காங்கிர ஸையும் மிஞ்சி விட்டார். மேற்கு வங்கத்தில் சாரதா உள்ளிட்ட நிதி நிறுவன மோசடிகளில் மம்தா கட்சியின் தலைவர்களும் சிபிஐ.யால் கைது செய்யப்பட் டுள்ளனர். மேலும் பலருக்கு எதிராக விசாரணையும் நடந்து வருகிறது. இதனால், மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கும் மம்தா, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க விரும்பு கிறார். அவரது மாநில மொழி யான பெங்காலி பேசுவோர் உ.பி. மற்றும் பஞ்சாபில் அதிகம் உள்ள னர். எனவே இவ்விரு மாநிலங்களில், தான் பிரச்சாரம் செய்வதுடன், தனது கட்சித் தலைவர்களின் ஒரு குழுவையும் இங்கு களமிறக்க முடிவு செய்துள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவை உறுப் பினருமான சுல்தான் அகமது கூறும்போது, “உ.பி.யில் அகிலேஷ் - காங்கிரஸ் கூட்ட ணியை நாங்கள் ஆதரிக்கிறோம். ஏனெனில், பண மதிப்பு நீக்க விவகாரத்தில் உ.பி.யின் லக்னோ வுக்கு போராட்டம் நடத்தச் சென்ற எங்கள் தலைவியை, முதல்வர் அகிலேஷ் நேரில் வந்து வரவேற்றார். பஞ்சாபில் 20 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம்” என்றார்.

உ.பி.யில் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை ஏழு கட்டங் களாகவும், பஞ்சாபில் பிப்ரவரி 5-ல் ஒரேகட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங் களில் திரிணமூல் காங்கிரஸ் பிரச்சாரகர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையத்துக்கு கட்சி யின் துணைத் தலைவர் முகுல் ராய் அனுப்பியுள்ளார். இதில் மம்தாவுடன் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பெங்காலி திரைப்பட பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

வட மாநிலங்கள் முழுவதும் தனது கட்சியை பரப்பி தன்னை ஒரு தேசிய தலைவராகவும் முன்னிறுத்த மம்தா முயன்று வருகிறார். வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அதிக மாநிலங்களில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in