

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் அது 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று மூத்த வழக்கறிஞரும் எம்.பியுமான ராம் ஜேத்மலானி தெரிவித்துள்ளார்
போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
அகிலேஷ் யாதவ் மட்டுமே இப்போதைக்கு சிறந்தவர் ஆவார். நான் அவருக்காக இறுதிவரை பணியாற்றுவேன். இவர் தந்தையின் முட்டாள்தனமான செயல்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டுவிட்டன.
இந்திய மக்கள் இன்றைய நிலையில் புத்திசாலிகளாக உள்ளனர், எனவே மோசமானவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த மாட்டார்கள். அகிலேஷ் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். அவர்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன், அகிலேஷ் நேர்மையானவர்.
இந்த உ.பி. தேர்தலில் (பாஜகவின்) தோல்வி அடைவது, 2019-ல் என்ன நடக்கும் என்பதை முடிவாகக் கணிப்பதாக அமையும்.
இவ்வாறு கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதைப் பற்றி ஜேத்மலானி கூறும்போது, “அவர் சுத்த மோசம்... மோசம்.. மோசம்.. அவர் பொருள்பட எதுவும் பேசவில்லை” என்றார்.
பஞ்சாப் தேர்தல் பற்றி கூறும்போது, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறேன், என்றார் ஜேதமலானி.