ஜெ. பிறந்த நாள் தொடர்பாக சசிகலா கடிதம் எழுதினாரா?- பெங்களூரு சிறை அதிகாரி விளக்கம்

ஜெ. பிறந்த நாள் தொடர்பாக சசிகலா கடிதம் எழுதினாரா?- பெங்களூரு சிறை அதிகாரி விளக்கம்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் பிறந்த நாள் தொடர்பாக வி.கே.சசிகலா நேற்று கடிதம் எதுவும் அனுப்பவில்லை என பெங்களூரு சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, “மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்” என கடிதம் எழுதியதாக அதிமுக தலைமை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமாரிடம் கேட்டபோது, “இரு தினங்களாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை. அவரும் சிறையில் இருந்து நேற்று யாருக்கும் கடிதம் எழுதவில்லை.

ஒருவேளை முன்கூட்டியே எழுதி தரப்பட்ட கடிதமாக இருக்கலாம். சசிகலா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் சிறைத்துறை மூலமாகவே கடிதங்கள் எழுதலாம். அதற்கு எந்த தடையும் இல்லை” என்றார்.

கர்நாடக அதிமுகவினர் கூறும்போது, “க‌டந்த திங்கள் கிழமை சசிகலாவை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசினார். அப்போது சசிகலா இந்த கடித‌த்தைக் கொடுத்திருக்கலாம். இல்லையெனில் கட்சித் தலைமையே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in