

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதி கள் தங்களது போராட்டத்தை நாளை மறுநாள் வரை நீட்டித்திருப் பதால் புல்வாமா மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிர வாத தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்முதலாக ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. இதுவரை 2 போலீஸார் உட்பட 81 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாதிகள் தங்களது போராட்டத்தை நாளை மறுநாள் வரை நீட்டித்துள்ளனர். பந்தி போரா, குப்வாரா ஆகிய மாவட்ட மக்கள் பாராமுல்லாவை நோக்கி யும், தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான், குல்காம் மற்றும் ஆனந்த்நாக் மாவட்ட மக்கள் புல்வாமா நோக்கியும், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மற்றும் புத்காம் மாவட்ட மக்கள் நகர் நோக்கியும் கண்டனப் பேரணி நடத்த வேண்டும் என பிரிவினை வாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே சோபியான் மற்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு நீடிப்பதால் புல்வாமா மாவட்டத்தில் மட்டும் நேற்று மீண்டும் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்கு கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. 73-வது நாளாக நீடிக்கும் இந்த அறிவிக்கப்படாத முழு அடைப்பு காரணமாக ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்படைந்துள்ளது.
ரூ.20 லட்சம் நிதியுதவி
காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். அவர்களில் 4 பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று அறிவித்தார்.
ஜார்கண்ட்
யூரியில் தீவிரவாத தாக்குதலில் இறந்த 17 வீரர்களில் 2 பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் நேற்று அறிவித்தார். அவர் கூறும்போது, ‘‘தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் அரசு செய்யும். இறந்த வீரர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும்’’ என்றார்.
பிஹார்
காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.வித்யார்த்தி, ராகேஷ் சிங், அசோக் குமார் சிங் ஆகிய 3 வீரர்கள் இறந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் நேற்று தெரிவித்தார். மேலும், அரசு மரியாதையுடன் அவர்களுடைய உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.