

மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று வாக்களித்தார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் இரோம் ஷர்மிளா. இதற்காக கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து உண்ணா விரதம் இருந்தார். ஆனாலும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட அவர், அரசியலில் இறங்குவதாக அறிவித்தார்.
இதன்படி ‘மக்களின் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
நேற்று முதல்கட்ட தேர்தல் நடந்தது. இதில் குராய் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் ஷர்மிளா வாக்களித்தார். கடந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக ஷர்மிளா வாக்களித்தார். இவர் தவுபால் தொகுதியில் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.
வாக்களித்த பின்னர் ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறும் போது, “எங்கள் கட்சியின் சார்பில் நடந்த தேர்தல் பிரச் சாரத்தின்போது இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். எனவே, இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.