

டெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியின் தலைமை இமாம் பாகிஸ்தானில் காணாமல்போனது குறித்து அந்நாட்டு அரசிடம் இந் தியா கவலை தெரிவித்துள்ளது.
டெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் பழமையான சூஃபி மசூதி உள்ளது. இதன் தலைமை இமாம் சையது ஆசிஃப் நிஜாமி (80), அவரது உறவினர் நஜீம் அலி நிஜாமி ஆகியோர் பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தாதா தர்பார் மசூதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் லாகூர் செல்வதற்கு முன் உறவினர்களைச் சந்திப்பதற்காக, கடந்த 8-ம் தேதி விமானம் மூலம் கராச்சி சென்றடைந்தனர். இதன் பிறகு இவர்களைக் காணவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறும்போது, “இந்த விவகாரத்தை பாகிஸ் தான் அரசிடம் கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் இரு வரும் தற்போது எங்கு இருக்கிறார் கள் என்பதைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு கேட்டுள்ளோம்” என்றார்.