

டெல்லி அரசில் புதிய அமைச்சர் களான கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோரின் நியமனங்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் நேற்று ஒப்புதல் அளித்தார்.
யூனியன் பிரதேசமான டெல்லியைப் பொறுத்தமட்டில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் 6 பேர் அமைச் சர்களாக இருந்தனர். தற்போது 4 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.
கடந்த ஆண்டு அமைச்சரவை யில் இருந்து நீக்கப்பட்ட சந்தீப் குமார் மற்றும் கடந்த 6-ம் தேதி நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா ஆகி யோருக்குப் பதிலாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களான கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோர் அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
கபில் மிஸ்ரா நீக்கப்பட்ட அன்றே புதியவர்கள் நியமனத் துக்கான ஆவணம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் வேண்டுமென்றே குடியரசுத் தலைவருக்கு ஆவணங்களை அனுப்பாமல் காலம் தாழ்த்துவ தாக முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத் தக்கது.