

மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன் தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளதாக அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரி வித்தன.
ஆளுநர் மாளிகையை இளம் பெண்கள் கிளப் ஆக மாற்றி அதன் மாண்பை சண்முகநாதன் குலைத்துவிட்டதாகவும் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மேகாலயா ஆளுநர் மாளிகை ஊழியர்கள் கடிதம் எழுதினர்.
சண்முகநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மகளிர் அமைப் பினர் கையெழுத்து இயக்கம் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியும் இக்கோரிக்கையை வலியுறுத்தியது.
இந்நிலையில் சண்முகநாதன் தனது பதவியை ராஜினாமா செய் துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டா ரங்கள் தெரிவித்தன.