கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாடுகளை வேனில் ஏற்றிய பாஜக நிர்வாகி கொலை - இந்துத்துவா அமைப்பினர் 18 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாடுகளை வேனில் ஏற்றிய பாஜக நிர்வாகி கொலை - இந்துத்துவா அமைப்பினர் 18 பேர் கைது
Updated on
2 min read

கர்நாடகாவில் மாடுகளை வேனில் ஏற்றி, விற்கச் சென்ற பாஜக நிர்வாகியை இந்துத்துவா அமைப் பினர் இரும்பு கம்பியால் அடித்த கொன்றனர். இது தொடர்பாக போலீஸார் 18 பேரை கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கேஜிகெ கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் பூஜாரி (29). வாடகை வேன் ஓட்டுநரான இவர் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் பகுதி செயலாளராக இருக்கிறார்.

கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் இவர் அதே பகுதியை சேர்ந்த அக் ஷய் தேவடிகா (22) என்பவருடன் சேர்ந்து 3 மாடுகளை ஹெப்ரி சந்தைக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றியுள்ளார்.

அப்போது இந்து ஜாகர்ன வேதிகே அமைப்பின் தலைவர் காந்த் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்பி னர் அங்கு வந்தனர். அவர்கள், “நாங்கள் பசு பாதுகாப்பு அமைப் பைச் சேர்ந்தவர்கள். மாடுகளை ஏற்றிச் சென்று, கொன்றால் உங்களை கொல்வோம்''எனக் கூறி பிரவீன் பூஜாரி, அக்ஷய் தேவடிகா ஆகியோரை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கினர். மாடுகளை ஏற்ற பயன்படுத்திய வேனும் நொறுக்கப்பட்டது.

ரத்தம் கொட்டிய நிலையில் கதறிய பிரவீன் பூஜாரி மற்றும் அக் ஷய் தேவடிகாவை ஊர்வலமாக கிராமத்தின் மையப் பகுதிக்கு தூக்கி சென்றனர். அங்கு கிராம‌ மக்களை அழைத்து, “நாங்கள் இவர்களை தாக்கி, 3 மாடுகளை மீட்டுள்ளோம். இவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளோம்” எனக் கூறி பிரம்மாவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், படுகாயமடைந் திருந்த பிரவீன் பூஜாரி மற்றும் அக் ஷய் தேவடிகாவை பிரம்மாவரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நீண்ட நேரம் ரத்தம் வெளியேறியதால் பிரவீன் பூஜாரி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நிலையில் உள்ள அக் ஷய் தேவடிகாவை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடந்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், இது தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.டி.பாலகிருஷ்ணா நேற்று கேஜிகெ கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதனிடையே பிரம்மாவர் காவல் துறையினர் இந்துத்துவா அமைப்பினர் 18 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கண்டனம்

இந்நிலையில் உடுப்பி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குமார் சொர்கி, கொலை செய்யப்பட்ட பிரவீன் பூஜாரியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அக் ஷய் குமாரின் மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து வினய் குமார் சொர்கி பேசும்போது, “ மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாட்டின் பெயரால் மனித உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. இத் தகைய செயலில் ஈடுபடும் இந்துத் துவ அமைப்பினர் மீது பாஜக கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன் விளைவாக அப்பாவி மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

பாஜகவினரின் அலட்சியப் போக்கின் காரணமாக தற்போது, பாஜக நிர்வாகியே இந்துத்துவா அமைப்பினரால் அடித்து கொல்லப் பட்டிருக்கிறார். இதனை வன்மை யாக கண்டிக்கிறேன். இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in