

உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இன்னும் அதிமுக வழக்கறிஞர்களுக்கு கிடைக்கவில்லை.
தீர்ப்பு நகல் கிடைக்காததால் அதிமுக வழக்கறிஞர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
தீர்ப்பு நகல் கிடைக்கப்பெற்றால்தான் அதை சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் வழங்கி ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க முடியும்.
இதற்கிடையில் பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் உணவு இடைவேளைக்காக பணிகள் நிறுத்தப்படும். மீண்டும் 3 மணிக்கே நீதிமன்றம் இயங்கும்.
எனவே, 50-க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றனர்.