Last Updated : 12 Jun, 2016 10:36 AM

 

Published : 12 Jun 2016 10:36 AM
Last Updated : 12 Jun 2016 10:36 AM

பிஹாரில் பிளஸ் 2 தேர்வில் மோசடி: தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் சரண்

பிஹாரில் சமீபத்தில் முடிந்த பிளஸ் 2 தேர்வில் மோசடிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகுதியில்லாத மாணவர்கள் பலர் முதலிடம் பெற்றிருப்பதை தொலைக்காட்சிகள் அம்பலப் படுத்தின.

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த மோசடியில் பள்ளி தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங்குக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார்.

இதற்கிடையில் கலை பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற முதல் 7 மாணவர்களுக்கும் அறிவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தப்பட்டது. இதில் கலைப் பிரிவில் முதலிடம் பெற்ற ரூபிராய், அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த சவுரப் சிரேஷ்டா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட பிஷுன் ராய் கல்லூரி செயலாளர் - முதல்வர் பச்சா ராய், வைஷாலி மாவட்டம் பகவான்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.

இந்த தேர்வு மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு குழு தலைவரும் பாட்னா போலீஸ் கண்காணிப்பாளருமான மனு மகராஜ் உறுதிப்படுத்தினார். இந்த மோசடியில் பச்சா ராயின் மகள் ஷாலினி ராய் பெயரும் முதல் தகவல் அறிக்கை யில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிஷுன் ராய் கல்லூரியில்தான் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் மாணவர்கள் ரூபிராய், சவுரப் சிரேஷ்டா ஆகியோர் படித்து முதலிடம் பிடித்ததாக தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதே கல்லூரியில் படித்த ராகுல் குமார் என்ற மாணவர் அறிவியல் பாடப் பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார். இவரது தேர்வு முடிவும் ரத்து செய்யப்பட்டது. விசாரணை யில் இந்த மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றி, அவர்க ளுக்கு அதிக மதிப்பெண் வழங்கி மாநிலத்திலேயே முதல் 3 இடங்களை பெற வைத்ததாக தெரியவந்துள்ளது.

பாஜக புகார்

கைது செய்யப்பட்ட பச்சா ராய், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத் தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோரின் வெற்றிக்காக பெரி தும் பாடுபட்டவர் என்று பிஹார் பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

இதற்கிடையில், இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 5 பேரை போலீ ஸார் நேற்று பாட்னா சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x