

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நியாயமாகவும், நடு நிலையாகவும் நடைபெற போலீ ஸாரின் செயல்பாடு உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி எச்சரித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பல் வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோ சனை கூட்டத்தில் நேற்று நசிம் ஜைதி பேசியதாவது:
போலீஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர் தலை நியாயமாகவும், அமைதி யாகவும் நடத்தி முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. சில குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதக மாக போலீஸார் தவறாக ஏவப்படலாம் என அரசியல் கட்சியினர் சந்தேகம் எழுப்பி யுள்ளனர்.
எனவே வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் போலீஸ் நிலையங்கள் மீது தான் தேர்தல் ஆணையத்தின் முழு கவனமும் குவிந்து இருக்கும்.
பல போலீஸ் நிலையங்களில் ஆய்வாளர்களுக்குப் பதிலாக துணை ஆய்வாளர்கள் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளதாகவும். அவர்கள் பார பட்ச முறையில் செயல்பட வாய்ப்புள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே போலீஸ் நிலையங்களில் ஆய்வாளர் கள் நிலையிலான பொறுப் பாளர்களை நியமிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்னதாகவே மத்திய படைகள் மாநிலத்தில் குவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.