தமிழக பழங்குடி மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனே வழங்குக: மக்களவையில் இந்திய கம்யூ. கோரிக்கை

தமிழக பழங்குடி மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனே வழங்குக: மக்களவையில் இந்திய கம்யூ. கோரிக்கை
Updated on
1 min read

தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகை உடனே வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மக்களவையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்பியான பி.லிங்கம் 377 விதியின் கீழ் எழுப்பினார்.

இது குறித்து லிங்கம் தாக்கல் எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் தம் கல்விக்கான மத்திய அரசின் 2013-14 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகையை இன்னும் பெறவில்லை.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய மாணவர்கள் சுமார் 7,2300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் அளவு சுமார் 549 கோடி ரூபாயாகும்.

இவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசின் உதவித் தொகையை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டு முடியும் தருவாயிலும் அவர்களுக்கான உதவிதொகை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலை இருக்கும் அவர்களின் கல்வியை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

மேலும், தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலைகழகம், பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைகழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட பலதின் ஆய்வு மாணவர்களுக்கும் கடந்த 18 மாதங்களாக மத்திய பல்கலைகழக மானியக்குழுவின் உதவிதொகையும் கொடுக்கப்படவில்லை.

எனவே, இந்த உதவித் தொகைகளை உடனடியாக அளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in