

ஜம்மு காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி வழியே சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகள் புது டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர்.
கடந்த ஜனவரி 7-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திவந்த டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இருதரப்பு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. கடந்த வாரம்வர்த்தகம் மீண்டும் தொடங்கியபோது, சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பது குறித்து இரு நாடுகளின் கூட்டு செயல்பாட்டுக் குழு சந்தித்துப் பேச ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறு கிறது. இதில் பாகிஸ்தான் தரப்பில் தெற்கு ஆசிய விவ காரங்களுக்கான வெளியுறவு அதிகாரி ரிப்பத் மசூத், இந்தியா தரப்பில் வெளியுறவுத் துறை இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் வர்த்தக கூட்டு செயல்பாட்டுக் குழுவினர் சந்தித்துப் பேசுகின்றனர்.
காஷ்மீர் வழியே தற்போது 21 பொருள்கள் மட்டுமே ஏற்றுமதி – இறக்குமதிக்கு அனுமதிக்கப் படுகிறது. இதை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.