

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், மத்திய நிதியமைச் சராக இருந்த ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கும்படி சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை நிர்பந்தம் செய்து, அந்நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் துக்கு விற்க வைத்ததாக குற்றம்சாட்டப் பட்டது. இதற்கு கைமாறாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் பங்குதாரர்களாக உள்ள ஆஸ்ட்ரோ நெட்வொர்க் நிறு வனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், 2ஜி அலைக் கற்றை உரிமம் ஒதுக்கீடு குறித்த வழக்கு, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்தே அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கூடுதல் அவகாசம் கோரியதை யடுத்து அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
விசாரணையின்போது சுப்பிர மணியன் சுவாமி ஆஜராகி, “ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு விதிகளை மீறி, மத்திய நிதித் துறையின் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர் பாக அப்போது மத்திய நிதியமைச் சராக இருந்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி, அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் சிபிஐ தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ-யிடம் விளக் கம் பெற்று வரும் 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சிபிஐ வழக்கறிஞர் கே.கே.வேணு கோபாலுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். வரும் 16-ம் தேதி இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளது.
அமலாக்கப் பிரிவு நடவடிக்கை
இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ரூ.742 கோடி கைமாறி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவ காரம் தொடர்பாக அம லாக்கப் பிரிவு ஏற்கனவே மாறன் சகோதரர் களுக்கு ரூ.1,767 கோடிக்கான நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் தொடர்ச்சியாக சொத்து முடக்க நடவடிக்கையில் இறங் கவும் அமலாக்கப் பிரிவு முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.