21 ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைக்கப்பெற்ற நீதிபதி

21 ஆண்டுகளுக்குப் பின் நீதி கிடைக்கப்பெற்ற நீதிபதி
Updated on
1 min read

நம் நாட்டில் நீதிபதி ஒருவருக்கே நீதி கிடைப்பதற்கு 21 ஆண்டுகள் ஆகியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் (ஜேஎம்எப்சி) ஆக பணியாற்றியவர் ஆர்.கே.திவ்யேஷ்வர். இவர் ஆனந்த் மாவட்டத்தில், பெட்லாட் நகரில் உள்ள சக பெண் நீதிபதி (ஜேஎம்எப்சி) எஸ்.சி. ஸ்ரீவத்ஸவா வின் வீட்டுக்கு கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி சென்றுள்ளார்.

இதுகுறித்து 5 நாட்களுக்குப் பிறகு மாவட்ட நீதிபதியிடம் பெண் நீதிபதி புகார் செய்துள்ளார். “திவ்யேஷ்வர் மது அருந்தியிருப் பது போல் காணப்பட்டார். என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” என்று அவர் புகார் கூறினார். இதனை திவ்யேஷ்வர் மறுத்தார்.

இதையடுத்து விசாரணைக்குப் பிறகு திவ்யேஷ்வர் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு, 1993-ல் பணி யிலிருந்து டிஸ்மிஸ் செய்யப் பட்டார். இதை எதிர்த்து திவ்யேஷ்வர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். விசாரணை யின்போது பெண் நீதிபதியின் வீட்டுக்கு அருகில் வசித்த மற் றொரு நீதிபதி சாட்சியம் அளித்தார். இதன் அடிப்படையில் சம்பவ நாளன்று திவ்யேஷ்வர் மது அருந்தி யிருந்தார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும் பெண் நீதிபதியின் குற்றச்சாட்டையும் நம்பவில்லை.

இதையடுத்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “சக ஊழியரின் அழைப்பில்லாமல் அவரது வீட்டுக்கு சென்றதற்காக விதிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம். எனவே திவ்யேஷ்வருக்கு 3 ஊதிய உயர்வுகளை மட்டும் ரத்துசெய்து பணியில் தொடர அனு மதிக்கிறோம். மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கு அவருக்கு ஊதியம் வழங்க வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தது.

என்றாலும் மாநில அரசும் உயர்நீதிமன்ற நிர்வாகமும் இத்தீர்ப்பை ஏற்கத் தயாரில்லை. “அவருக்கு டிஸ்மிஸ் காலத்துக்கான சம்பளம் வழங்க முடியாது” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற சட்டப்போராட்டம் 2014 செப்டம்பர் வரை நீடித்தது. இறுதியில் அரசின் மேல் முறையீட்டை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அண்மையில் தள்ளுபடி செய்தது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in