

மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று பேசியதாவது: ஒரே நேரத்தில் பல்வேறு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஒரு எம்.பி மூலம் பதிவு செய்யப் படுகிறது.
இதனால், எந்த ரயிலில் அவர் பயணம் செய்யப் போகிறார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் இந்த வசதியால் முறைகேடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தடுக்க, முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பிக்கள் அனைவருக்கும் ரயில்வே அமைச்சகம் தனி அடையாளத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த அடையாளத்துடன் ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப் படும். இதை வைத்து சம்பந்தப் பட்ட எம்.பி மட்டுமே டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.