காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்குப் பதில் ரப்பர் தோட்டா பயன்படுத்த ஆய்வு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்குப் பதில் ரப்பர் தோட்டா பயன்படுத்த ஆய்வு -  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் கும்பலைக் கலைக்க கடைசி ஆயுதமாகத் தான் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்து வதாகவும், அதற்கு மாற்றாக ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்த ஆய்வு செய்துவருவதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் தூண்டு தால் அங்கு பாதுகாப்புப் படை யினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத கும்பலின் கமாண்டர் புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

அம்மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத் தினரும், போலீசாரும் போராட்டக் காரர்களைக் கலைப்பதற்கு பெல்லட் ஆயுதங்களைப் பயன் படுத்தி வந்தனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில பார் அசோசியேஷன் எதி்ர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, பெல்லட் ஆயுதங்களைப் பயன் படுத்த நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு, நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார். அப்போது, நச்சுக் கலவை கலந்த தண்ணீர், அதிக லேசர் ஒளி, மற்றும் அதிக ஒலி எழுப்பும் முறை கள் போன்றவை போராட்டக் கார்களைக் கலைக்க உதவ வில்லை. எனவேதான், ரப்பர் தோட்டாக்கள், பெல்லட் ஆயுதங் கள் பயன்படுத்தப்படுகின்றன, போராட்டக்காரர்களைத் தடுக்க கடைசி ஆயுதமாகத்தான் ஆயுதங் கள் பிரயோகிக்கப்படுகின்றன. மாறாக யாரையும் கொல்லும் நோக்கம் கிடையாது என்றார்.

கடந்த மாதம் இதே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாது காப்புப் படையினர் எந்த ஆயு தத்தைப் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்மானிக்காது. அதேநேரம், தற்போதைய சூழலில் இதுபோன்ற (பெல்லட்) ஆயுதங்களுக்குப் பதிலாக மாற்று வழியை பின்பற்றலாம், என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in