

உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஜவகர்லால் நேரு பல்கலைகழக(ஜேஎன்யு) மாணவரான கண்ணய்யா குமார் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்காக(சிபிஐ) அவர் தலைநகர் லக்னோவில் இருந்து பிரச்சாரம் துவக்க உள்ளார்.
இது குறித்து சிபிஐயின் உபி மாநில மூத்த தலைவரான அசோக் மிஸ்ரா கூறுகையில், ‘வரும் 18 ஆம் தேதி லக்னோவில் துவங்கி மாநிலம் முழுவதிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார் கண்ணய்யா. இதற்காக வரது பிரச்சாரம் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு வருகிறது. இது, இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களுக்கானதாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜேஎன்யுவின் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற மாணவர் பேரவையின் தலைவராக இருந்தார். இந்த கூட்டமைப்பு சிபிஐயின் மாணவர் பிரிவாக உள்ளது. கடந்த பிப்ரவரி 9-ல் டெல்லியின் ஜேஎன்யு வளாகத்தில் தேசவிரோத கோஷம் இட்டதாக வழக்கில் சிக்கினார் கண்ணய்யா குமார். இதற்காக அவர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றுள்ளார். முதன்முறையாக கேரளா மாநில சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்திருந்தார். அடுத்து குஜராத்தில் உனா நகரில் தலீத்துக்கள் மீதான வன்முறைக்கு எதிரான கன்னட ஆர்பாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி சார்பில் அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவ் உபி முதல்
அமைச்சராக உள்ளார். இதன் எதிர்கட்சியாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் உள்ளது. இவர்களுடன் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் போட்டியில் உள்ளன. இங்கு இடதுசாரி காட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர்