Last Updated : 04 Jan, 2016 10:23 AM

 

Published : 04 Jan 2016 10:23 AM
Last Updated : 04 Jan 2016 10:23 AM

பதான்கோட் விமானப்படை தளத்தில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை: என்.எஸ்.ஜி. தகவல்

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நேற்று 3-வது நாளாக என்கவுன்ட்டர் நீடித்தது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப் பட்டார். இதுவரை 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே விமானப்படை குடியிருப்பு பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க லாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.

பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் இந்திய விமானப்படைத் தளம் உள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தான் தீவிரவாதி கள் நுழைந்தனர். பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக் கும் இடையே 3-வது நாளாக நேற் றும் கடும் சண்டை நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் மாலை 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு தீவிரவாதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு தீவிர வாதி குறித்து ராணுவத் தரப்பில் எவ்வித தகவலும் இல்லை.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிர வாதிகள் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளி யாகி வருகின்றன. எத்தனை தீவிர வாதிகள் விமானப் படைத் தளத்துக் குள் நுழைந்துள்ளனர் என்பதும் சரியாக தெரியவில்லை.

இதுவரை 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு அவர் களின் சடலங்கள் கைப்பற்றப்பட் டுள்ளன.

குடியிருப்பில் தீவிரவாதிகள்

பதான்கோட் விமானப் படைத் தளம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு பணியாற்றும் அதிகாரிகள், வீரர் களுக்காக தனியாக குடியிருப்பு பகுதி உள்ளது. அந்த குடியிருப் புப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அங்குள்ள கட்டிடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அங்கு முகாமிட் டிருக்கும் லெப்டினன்ட் கர்னல் தாமூன் கூறியதாவது:

விமானப் படைத் தளம் சுமார் 23 கி.மீட்டர் தொலைவுக்கு பரந்து விரிந்துள்ளது. ஊழியர் குடி யிருப்பு, பள்ளி, வனப்பகுதி என ஒரு சிறிய நகரமே அமைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகிறோம்.

இதுவரை 5 தீவிரவாதிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளோம். பாதுகாப்புப் படை தரப்பில் 7 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிதாக 2 தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டிருப்ப தால் ராணுவத்தின் என்கவுன்ட்டர் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி ஆலோசனை

பதான்கோட் தாக்குதல் தொடர் பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 2-வது நாளாக நேற்றும் அவர் உயர்நிலை ஆலோசனைக் கூட் டத்தை நடத்தினார்.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளி யுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று சீனத் தலைநகர் பெய்ஜிங் குக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x