

கேரளாவில் அனைத்துப் பள்ளி களிலும் மலையாள மொழியைக் கட்டாயப் பாடமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற் கென சட்டம் இயற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள அரசின் அமைச்சர வைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக்கும் வகையில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது.
மேல்நிலைப் பள்ளி வரை மாணவ, மாணவிகள் கட்டாயம் மலையாள மொழியை ஒரு பாட மாக படிக்க புதிய சட்டம் வழி வகை செய்யும். சில பள்ளிகள் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக வைத்திருக்காதது அரசின் கவனத்துக்கு வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இதேபோல், அம்மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெரும் புயலைக் கிளப்பிய சோலார் பேனல் ஊழல் குற்றச் சாட்டை விசாரித்து வரும் விசா ரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங் களுக்கு நீட்டிக்க, அமைச்சர வைக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.
நீதிபதி சிவராஜன் தலைமை யிலான அந்த ஆணையம் கேட்டுக் கொண்டதன் அடிப் படையில் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அமைக்கப் பட்ட இந்த ஆணையம் தொடர்ந்து பலமுறை நீட்டிக் கப்பட்டு வருகிறது.