Published : 25 Aug 2016 04:02 PM
Last Updated : 25 Aug 2016 04:02 PM

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டவர்கள்: மீண்டும் சுப்பிரமணியன் சுவாமி

ரிசர்வ் வங்கியின் பணவீக்க மையமான வட்டி விகிதத்தை முன்வைத்து அரசியல் கருத்துகளை வெளியிட்டு வரும் பாஜக-வின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டுமொரு முறை ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மீது விமர்சனம் வைத்தார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “மேலாண்மை பட்டதாரிகளான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோரை அமெரிக்கா இந்தியா மீது திணித்துள்ளது. பொருளாதாரம் பொதுவான சமநிலையில் இருக்கும் போது நிர்வாக மாதிரிகளோ குறுகிய மனப்பான்மை கொண்டதாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.

அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது, அவரது இடத்திற்கு தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேல் வருகிறார்.

இந்நிலையில் வட்டிவிகித மாற்றங்கள் பற்றிய கொள்கை முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் தனது விமர்சனக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x