

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளால் குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு பலன்கள் ஏற்பட்டுள்ளன. இதை நாம் இழந்துவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. பயங்கரவாதத்தை உறுதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள வேண்டும். காஷ்மீரில் நமது குடிமக்கள் பலரின் மரணமும் பாது காப்பு படையினர் மீதான தாக்குதலும் மிகுந்த வேதனை அளிக்கிறது.
காஷ்மீர் மக்களின் எதிர் பார்ப்புகள் அர்த்தமுள்ள வகையில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு நிலையான மற்றும் நீடித்த வழிகளை அமைதி மற்றும் ஜனநாயக வழியில் காண்பதற்கு அரசியல் கட்சிகளை காஷ்மீர் மக்கள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.
காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தும் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “காஷ்மீரில் இதற்கு மேல் உயிரிழப்பு ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதே தற்போதைய தேவை யாகும். வன்முறையில் காயம் அடைந்த 200-க்கும் மேற் பட்ட பொதுமக்கள் மற்றும் பாது காப்பு படையினர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.