Last Updated : 15 Feb, 2017 09:04 AM

 

Published : 15 Feb 2017 09:04 AM
Last Updated : 15 Feb 2017 09:04 AM

சசிகலா வழக்கில் அப்பீலுக்கு வழியில்லை: சீராய்வு மனு தள்ளுபடியாக 99% வாய்ப்பு - மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வழியில்லை, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டாலும் அது தள்ளுபடி ஆவதற்கே 99 சதவீதம் வாய்ப்புள்ளது என பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:

சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து?

தற்போது சசிகலா விஷயம் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. அவர் முதல்வர் பதவியில் அமர முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இப்படி ஒரு சூழ்நிலை வருவதற்கான வாய்ப்பு குறித்து சசிகலாவுக்கு முன்பே தெரிந்திருக்கும். எனவே முதல்வர் பதவியேற்க முயன்றதால் உருவான சர்ச்சையை அவர் தவிர்த்திருக்கலாம். தீர்ப்புக்காக சில நாட்கள் காத்திருந்திருக்கலாம். கட்சியும் பிளவுபட்டிருக்காது. இவ்வளவு எம்எல்ஏக்களை பிடித்து வைத்துக்கொண்டு ஒருவர் முதல்வராவதை மக்களும் விரும்ப மாட்டார்கள்.

மேல்முறையீடு செய்யப் போவதாக அதிமுக மூத்த தலைவர் எம்.தம்பிதுரை கூறி யுள்ளாரே?

மேல்முறையீட்டுக்கு எந்த வழியும் இல்லை. சட்டத்தை தம்பி துரை சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் எந்த வாய்ப்பும் இல்லை.

மேல்முறையீட்டுக்கு வாய்ப் பில்லை எனில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா?

சட்டப்படி யார் வேண்டுமானா லும் சசிகலா வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால் அது தள்ளுபடி செய்யப்படுவதற்கே 99 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் சசிகலாவுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.

இந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுக என்னவாகும்?

தீர்ப்பில் சசிகலாவுக்கு கிடைத்த தண்டனை அதிமுகவின் எதிர் காலத்தைச் சந்தேகத்திற்கு உரிய தாக்கி விட்டது. அதிமுகவிலேயே வேறு யாராவது ஒரு நல்ல தலை வர் முன்னிறுத்தப்பட்டு பதவி அமர்த் தப்பட்டால் அக்கட்சி நிலைபெறும்.

இந்நிலையில் அதிமுகவின ருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?

தங்கள் கட்சியில் நேர்மை யானத் தலைவரை முதல்வராக்க வேண்டும். அவர் மூலம் தமிழக மக்களுக்கு நற்பணிகள் செய்து அதிமுகவின் எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டும். நியாய மான முறையில் அதிமுகவினர் சிந்தித்து செயல்பட்டால் அது அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அளிக்கும். அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்னிறுத்தப்படாமல் போனது பெரிய குறையே.

சசிகலா பதவி ஏற்பு விவகாரத் தில் ஆளுநர் எடுத்த முடிவு சரியா?

இந்த தீர்ப்பு தொடர்பான தொலைதூரப் பார்வை தமிழக ஆளுநருக்கு இருந்திருக்கலாம். இதனால், அவர் பதவியேற்பு செய்து வைக்காமல் தாமதம் செய்திருக்கலாம்.

தற்போதைய நிலையில், ஆளுநர் இனி என்ன செய்ய வேண்டும்?

சசிகலா அத்தியாயத்தை மறந்துவிட்டு, ஆளுநர் இனி வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். தற்போது அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பின்னர் சட்டப்பேரவையில் அவர் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். இதுதான் சட்டப்படியான மற்றும் வழக்கமான நடைமுறை ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x