

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பிரதமரானால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித் திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே.
மராத்தி நாளேட்டின் ஆசிரியர்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடியபோது ஷிண்டே கூறியதாவது:
அரசியலில் எனக்கு குரு நாதராக இருப்பவர் சரத்பவார். அவரது ஆதரவும் ஆசியாலும் நான் அரசியலில் நுழைந்தேன். ஒவ்வொருவருக்கும் ஏதாவது குறிக்கோள் இருக்கும். பிரதமர் பதவியில் அமரவேண்டும் என்கிற லட்சியம் அவருக்கு 1992ம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது.
இதை நான் பல முறை தெரிவித்திருக்கிறேன். தேசிய அரங்கிலும் இதை வெளிப்படை யாக பேசி இருக்கிறேன். இந்த விவகாரத் தில் இரு நிலைகளை எடுத்திட எந்த காரணமும் கிடையாது.
பிரதமராக வரவேண்டும் என்று 1992ம் ஆண்டு முதலே பவார் முயற்சி செய்து வருகி றார். ஆனால் டெல்லியில் நடக்கும் அரசியல் குறுக்கீடாக நிற்கிறது என்றார் ஷிண்டே. இந்நிலையில், பவா ருக்கு ஆதரவாக ஷிண்டே தெரிவித்துள்ள கருத்து காங்கிரஸ் கட்சியில் எதிர்ப் பலையை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.
ஜனவரி 17ம் தேதி நடக்க வுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் பவாருக்கு ஆதரவான கருத்தை ஷிண்டே வெளியிட்டிருக்கிறார்.
பவார் 1999ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி னார். அதற்கு முன், சோனியா காந்தி வெளிநாட்டவர் என்ற பிரச்சினையை எழுப்பி காங்கிர ஸிலிருந்து விலகினார். மே மாதத்தில் நடக்கவுள்ள மக்கள வைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை திட்ட வட்டமாக அறிவித்துள்ள பவால், மாநிலங்களவை உறுப்பினர் பதவி மூலமாக நாடாளுமன்றம் செல்ல திட்டமிட்டு வருகிறார்.