Last Updated : 25 Apr, 2017 01:13 PM

 

Published : 25 Apr 2017 01:13 PM
Last Updated : 25 Apr 2017 01:13 PM

மத்திய அரசின் நக்சல் எதிர்ப்புக் கொள்கை மறு ஆய்வு செய்யப்படும்: ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் நக்சல் எதிர்ப்புக் கொள்கை மறு ஆய்வு செய்யப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நேற்று (திங்கள்கிழமை) தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். பலியான வீரர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

காலை 10.30 மணியளவில் அவர் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அவர் வந்தார். அங்கிருந்து சிஆர்பிஎப் தலைமையகத்துக்குச் சென்றார். நகச்லகள் தாக்குதலில் பலியான வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் சத்தீஸ்கர் ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டான்டன், முதல்வர் ராமன் சிங், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வர் ராமன் சிங், சிஆர்பிஎப் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், "பழங்குடிகளை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி நக்சலைட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் மிகவும் மோசமானது, இதனை ஒரு சவாலாக நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம், உத்தியை மறு பரிசீலனை செய்து, தேவையெனில் பதில் தாக்குதல் நடத்துவோம்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் ஆகியோர் இந்த தாக்குதலுக்கு தங்கள் கண்டனைங்களை தெரிவித்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x