பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம்

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை; ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்: குஜராத்தில் புதிய சட்டம்
Updated on
1 min read

குஜராத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறை வேற்றப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படும்.

குஜராத்தில் பசுவை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. எனினும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் அங்கு நீடித்து வந்ததை அடுத்து, தண்டனையை கடுமையாக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய சட்டம் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி பசுவை கொன்றது உறுதியானால் அவர் களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இறைச்சியை வாகனத்தில் கொண்டு சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய் தாலோ அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். பசு மட்டுமின்றி, எருது, கன்றுக்குட்டி எருமைகளை கொன்றாலும் இச்சட்டம் பாயும். தவிர அனைத்து குற்றங்களுக்கும் ஜாமீனும் வழங்கப்படமாட்டாது என புதிய சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா கூறும்போது, ‘‘பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம் 2011-ல் திருத்தம் செய்யும்படி சாதுக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர் களது கோரிக்கைக்கு இணங்க நாட்டிலேயே மிக கடுமையான சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், வாக்காளர் களை ஈர்க்கவும், அரசியல் ஆதாயம் பெறவும் மாநில அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருப் பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி யுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in