

ஹிராகாண்ட் ரயில் விபத்து நடந்த இடத்தில் ஆந்திர சிஐடி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்தில் காய மடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்ததால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜகல்பூரி லிருந்து ஒடிஷா மாநிலம் புவனேஷ் வருக்கு சென்று கொண்டிருந்த ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், கூனேரு ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தடம் புரண்டது. இன்ஜின் உட்பட 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 13 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர் கள் ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.2 லட்சமும் ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் நாசவேலை காரணமாக இருக்கலாம் என ரயில்வே மூத்த அதிகாரி சந்திர லேகா முகர்ஜி கூறினார். இதை யடுத்து இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிஐடி-யின் கூடுதல் டிஜிபி துவாரகா திருமலா, இன்ஸ் பெக்டர் ஜெனரல் அமித் கார்கே மற்றும் குழுவினர் சம்பவ இடத் துக்கு நேற்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இது போல இது ஐஎஸ் தீவிரவாதிகளின் நாசவேலையா என்ற கோணத்தி லும் தேசிய புலனாய்வு அமைப்பி னர் (என்ஐஏ) விசாரணை மேற் கொண்டனர்.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் எத்தனை பேர் பயணித்தனர்? அவர்களின் முழு விவரங்கள் மற்றும் விபத்து நடந்தபோது கூனேரு ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் யார் யார்? என்பது குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு சிஐடி கூடுதல் டிஜிபி துவாரகா திருமலா செய்தி யாளர்களிடம் கூறும்போது, “ரயில் விபத்துக்கு மாவோயிஸ்டுகள் அல்லது வேறு ஏதாவது சமூக விரோதிகளின் நாசவேலை காரண மாக இருக்குமா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற் றது. இதில் எந்த நாசவேலையும் நடக்கவில்லை என்று தெரியவந்துள் ளது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்த 42 பேரில் இதுவரை 23 பேரின் அடையாளம் மட்டுமே தெரியவந் துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.