

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் பரூக் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிலானி, உமர் பரூக் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதை மீறி, ஈதா வரை சென்று, ஷேக் அப்துல் ஆசிஷின் 8-வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முயன்றனர். இதைத்தொடர்ந்து, கிலானி கைது செய்யப்பட்டு, ஹும்ஹமா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மிர்வாஸ் கைது செய்யப்பட்டு, நிகீன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆசிஷ் நினைவுநாள் கூட்டத் தில் கலந்து கொள்ளுமாறு, இவர்கள் இருவரும் மக்களுக்கு கடந்த 4-ம் தேதி அழைப்பு விடுத்திருந்தனர். மேலும், சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க தங்கள் குழந்தை களை அனுப்ப வேண்டாம் எனவும் அவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டனர்.
அதேசமயம் வரும் 13, 14-ம் தேதிகளில் கருத்துக்கேட்பு பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தனர்.