2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ: பெங்களூருவில் கிரண் குமார் தகவல்

2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ: பெங்களூருவில் கிரண் குமார் தகவல்
Updated on
1 min read

பெங்களூருவில் நேற்று 5-வது விண்வெளி கண்காட்சி தொடங்கி யது. இதில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக தலைவர் (இஸ்ரோ) ஏ.எஸ்.கிரண் குமார் கூறியதாவது:

தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரோ வின் பலம் பன்மடங்கு உயர்ந் துள்ளது. இதனால் மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறோம். விஞ்ஞானிகளின் கடின உழைப்பினால் தற்போது இரண்டு செயற்கைக்கோள்களை உருவாக்கி இருக்கிறோம். இவற்றை இம்மாதத்தில் விண்ணில் ஏவ இருக்கிறோம்.

முதலில் வரும் 8-ம் தேதி இன் சாட் -3 டிஆர் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மார்க் -2 ராக்கெட் மூலம் செலுத்த இருக்கிறோம். இந்த செயற்கைக்கோளின் மூலம் பூமியின் தட்பவெப்பநிலை மாற றத்தைத் துல்லியமாக கண்டறிய லாம். இதையடுத்து இம்மாத இறுதி வாரத்தில் ஸ்காட்சாட் செயற்கைக்கோளை அல்ஜீரிய செயற்கைக்கோளுடன் சேர்ந்து விண்ணில் ஏவ இருக்கிறோம்.

இந்த செயற்கைக்கோளின் மூலம் கடலின் மேற்பரப்பில் உருவாகும் புயல், கடல் அலை சீற்றம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.

இஸ்ரோவின் வளர்ச்சியால் இனி ஆண்டுதோறும் 18 முதல் 24 வரையிலான செயற்கைக்கோள் களை உள்நாட்டிலே தயாரித்து விண்ணில் செலுத்த முடியும்.

இவ்வாறு கிரண்குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in