கேரள வாக்காளர்களுக்கு விமானத்தில் சலுகை

கேரள வாக்காளர்களுக்கு விமானத்தில் சலுகை
Updated on
1 min read

துபாயில் இருந்து கேரளத்துக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட் வழங்க கேரள முஸ்லிம் கலாசார மையம் ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள இந்த அமைப்பில் மொத்தம் 50 ஆயிரத்து 300 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் துபையில் இருந்து கேரளம் வரும் விமானக் கட்டணத்தில் மட்டுமே சலுகை வழங்கப்படும். திரும்பி செல்வதற்கான செலவை சம்பந்தப்பட்ட நபர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in