

பிரதமர் மோடி பயணம் செய்த ஏர் இந்தியா ஒன் விமானத்துக்கு மாற்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் செயலிழந்த நிலையில் வெடிகுண்டு இருந்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் மும்பையிலிருந்து ஹைதராபாத் வழியாக சவுதி அரேபியாவின் ஜெத்தாவுக்கு இயக்கப்பட்டது. அந்த விமானத் தின் வர்த்தக வகுப்பில் சீட் அருகே மர்மப் பொருள் ஒன்றை விமான ஊழியர்கள் பார்த்தனர். அந்த பயணிகள் விமானம் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்த ஏர் இந்தியா ஒன் விமானம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக இயக்கப்படுவதற்காக டெல்லியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் என்றும் கூறப்பட்டது. இதனால் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அந்த மர்மப் பொருள் வெடிகுண்டு இல்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட விமானம், பிரத மருக்காக மாற்று ஏற்பாடாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானம் அல்ல. பிரதமர் அமெரிக் காவுக்குப் பயணம் சென்ற போது, இந்த விமானத்தை டெல்லி பிராங்க்பர்ட் இடையே இயக்கினோம். இப்போது, அதை மும்பை ஹைதராபாத் ஜெத்தாவுக்கு இயக்குகிறோம்.
இது விமான நிலையத்திலும், விமானங்களிலும் ஊழியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படு கிறார்களா என்பதை அறிய தேசிய பாதுகாப்புப் படையினர் மேற் கொண்ட பாதுகாப்பு ஒத்திகை என்றார்.