14 கிலோ தங்கம் கடத்தியவர் கைது

14 கிலோ தங்கம் கடத்தியவர் கைது
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 14 கிலோ தங்கம் கடத்தி வந்த ஒருவரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.

கொல்கத்தாவின் நாகர் பஜார் பகுதியில் கடந்த 2-ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து தலா 116 கிராம் எடையுள்ள 120 தங்க பிஸ்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4.1 கோடியாகும்.

தங்க பிஸ்கெட்டுகளில் 62-ல் சுவிட்சர்லாந்து முத்திரையும் 58-ல் ஐக்கிய அரபு அமீரக முத்திரையும் காணப்பட்டது.விசாரணையில் இவை துபாயில் இருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in