பிரதமருடன் காஷ்மீர் ஆளுநர் ஆலோசனை

பிரதமருடன் காஷ்மீர் ஆளுநர் ஆலோசனை
Updated on
1 min read

கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது. பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் கல்வீசித் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதையடுத்து, அம்மாநில முதல்வர் மெகபூபா முக்தி, பிரதமர் மோடியைச் சந்தித்து, கடந்த மாதம் சந்தித்து பாதுகாப்பு நிலைமையை விளக்கினார்.

இந்த நிலையில், அம்மாநில ஆளுநர் வோரா, பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. அப்போது, காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம், பாதுகாப்பு சூழல் பற்றி அவர் பிரதமரிடம் விளக்கினார்.

முன்னதாக, கடந்த 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, வோரா சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், தெற்கு காஷ்மீர் பகுதியில் 4 ஆயிரம் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளைக் குறி வைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in