

பாலியல் புகாரில் சிகியுள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான தருண் தேஜ்பால், அரசியல் தூண்டுதல் காரணமாகவே தன் மீது கோவா போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாக தெரிவித்தார்.
கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் இந்த வழக்கில் தனிப்பட்ட கவனம் செலுத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தருண் தேஜ்பால் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவரது கைதுக்கு நாளை வரை இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு கோவா போலீசுக்கு நோட்டீசும் அனுப்பியது.
இதற்கிடையில், தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க, தெஹல்கா இதழ் அமைத்துள்ள விசாரணை குழுவிற்கு தலைமை வகிக்க பெண்ணியவாதி ஊர்வசி பூட்டாலியா மறுப்பு தெரிவித்துள்ளார்.