

அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள சாலோனிபாரி விமானப் படை தளத்தில் இருந்து சுகோய் -30 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.
இதன்பின்னர் 60 கி.மீ. தொலை வில் உள்ள தேஷ்பூரின் மேற்குப் பகுதியில் விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பதற்றமடைந்த அதிகா ரிகள் மாவட்ட காவல் துறையுடன் இணைந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 3 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத் தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டி னன்ட் கர்னல் சோம்பித் கோஸ் கூறுகையில், “சோனிட்பூர் மாவட்டத்தில் தேஷ்பூரின் மேற்குப் பகுதியில் 60 கி.மீ. தொலைவில் மாயமான விமானத்தின் பாகங் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற் போது அங்கு மோசமான வானிலை நிலவுகிறது. இருந் தாலும் தேடுதல் வேட்டை தொடர் கிறது” என்றார்.
இதையடுத்து, போர் விமானம் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங் கியிருக்கலாம் எனவும், அதில் பயணித்த வீரர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விமானம் மாய மானது தொடர்பாக நீதி விசார ணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விமானப்படை யின் செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் அனுபம் பானர்ஜி கூறும்போது, “விபத்துக்கான காரணத்தை அறிவதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. விமானத்தின் தகவல் பதிவு கருவி மற்றும் காணா மல் போன வீரர்களை தரை வழி யாகத் தேடும் பணி மேற்கொள் ளப்படுகிறது” என்றார்.