நதி நீர், மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஆளுநர் அறிவுறுத்தல்

நதி நீர், மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஆளுநர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் மின்சார விநியோகம், நதிநீர் பிரச்சினை தீவிரமாகாமல் இருக்க, இரு மாநில முதல்வர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முன் வர வேண்டும் என இரு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன் நேற்று அறிவுறுத்தினார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உதயமான நிலையில் இரு மாநிலங்களுக்கிடையேயும் மின் விநியோகம், நதிநீர் பிரச்சினை உருவாகி உள்ளது. இது குறித்து இரு மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் தனித்தனியே ஆளுநர் நரசிம்மனை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், ஆளுநர் நரசிம்மன் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் மின் விநியோகம், நதிநீர் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்காவிடில் இது தீவிரமாகும் அபாயம் உள்ளது. ஆதலால் அந்தந்த மாநில முதல்வர்கள் இதில் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இதில் மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது. ‘ஹுத் ஹுத்’ புயல் தாக்குதல் காரணமாக அழகிய நகரமான விசாகப்பட்டினம் சீர்குலைந்து காணப்படுகிறது. இதன் சீரமைப்பு பணிகள் விரைவில் நடைபெற்று மீண்டும் இந்நகரம் பழைய பொலிவுடன் அமைய வேண்டும். இவ்வாறு ஆளுநர் நரசிம்மன் பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in