இந்தியா
ஐ.எஸ்.ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி?
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் மூலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி.சி.அப்துல் ரகுமானுக்கு வந்துள்ளது.
தகவலுடன் கூடிய இந்தப் படத்தை, ஐ.எஸ். அமைப்பில் இருப் பதாக நம்பப்படும், காசர்கோடு மாவட்டத்தின் மற்றொரு இளைஞர் அனுப்பியுள்ளார். ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ் வித விவரமும் அத்தகவலில் இல்லை என அப்துல் ரகுமான் கூறினார்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “எங்களுக்கு இது தொடர் பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்றனர்.
