Last Updated : 05 Jan, 2016 09:13 AM

 

Published : 05 Jan 2016 09:13 AM
Last Updated : 05 Jan 2016 09:13 AM

தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்னல் நிரஞ்சன் உடலுக்கு சித்தராமையா அஞ்சலி



இறுதி சடங்கு இன்று கேரளாவில் நடக்கிறது

*

தீவிரவாத தாக்குதலில் பலியான லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமாரின் (34) உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட ஆயிரக்கணக்கானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளுக்கும், தேசிய‌ பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 5 தீவிரவாதிகளும், தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு தீவிர‌வாதியின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணியில், தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு நிபுணரான நிரஞ்சன் குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்ததில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நிரஞ்சன் குமாரின் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவரது தந்தை சிவராஜன் பெல் நிறுவனத்தின் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 சகோதரர்களும், சகோதரியும் உள்ளனர். நிரஞ்சன் குமாரின் மனைவி ரோஜா பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் விஸ்வமாயா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் நிரஞ்சன் குமாரின் உடல் நேற்று அதிகாலை பெங்க ளூருவில் உள்ள ஜாலஹள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. நிரஞ்சனின் உடலைக் கண்ட அவரது மனைவி, பெற்றோர், மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் கதறி அழுதனர். இதை யடுத்து பெல் மைதானத்துக்கு நிரஞ்சனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

மூவர்ண கொடி போர்த்தப்பட்ட நிரஞ்சனின் உடலுக்கு மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப், மெட்ராஸ் சாப்பர்ஸ், தேசிய பாதுகாப்புப் படையை சேர்ந்த அதிகாரிகள் உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து நண்பர் களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கர்நாடக முதல்வர் சித்த ராமையா, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் மற்றும் மத்திய சட்ட‌ அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோரும் மலர் வளை யம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் சித்தராமையா கூறும் போது, “நாட்டுக்காக உயிர்த் தியா கம் செய்துள்ள நிரஞ்சன் குமாரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகள், நிவாரண உதவியும் வழங்க‌ கர்நாடக அரசு தயாராக இருக்கிறது” என்றார். இதையடுத்து நேற்று மாலை நிரஞ்சனின் உடல் சொந்த ஊரான கேரளா நிலம் பாலக் காடு மாவட்டத்தில் உள்ள எலம்பச் சேரி கிராமத்துக்கு கொண்டு செல் லப்பட்டது. ராணுவ மரியாதை யுடன் இன்று காலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x