

புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைக்க வேண்டும் என்று அவரின் மனைவி நவ்நீத் கவுர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பகிரங்க மாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பகிரங்கமாக விசாரணை நடத்து வதற்கு ஒப்புக்கொண்டது.
1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர் பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இறுதியில், 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். அதை 8 ஆண்டுகளுக்கு பிறகு 20011-ம் ஆண்டு மே 14-ம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
தண்டனை குறைப்புத் தீர்ப்பு
இந்நிலையில், சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேருக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
பகிரங்க விசாரணை
இதைத் தொடர்ந்து புல்லரின் சார்பில் அவரின் மனைவி நவ்நீத் கவுர், உச்ச நீதிமன்றத்தில் தற்போது மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, எஸ்.ஜே.முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதோடு, பகிரங்கமாக விசாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டது.